• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கடல்வளங்களை பாதுகாத்தல் வாரத்தைப் பிரகடனப்படுத்தல்
- உக்கிப் போகாத கழிவுப் பொருட்களை நேரடியாகவோ அல்லது கால்வாய் ஊடாகவோ கரையோரம் மற்றும் சமுத்திர பிரதேசத்தில் ஒன்று சேர்வதன் மூலம் சமுத்திர சுற்றாடல் முறைமைக்கும் அதேபோன்று அதனோடு தொடர்புற்ற கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை போன்ற தொழில்களுக்கும் பிரதிகூலமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஆதலால், கடற்றொழில் சுற்றாடல் முறைமையை பாதுகாப்பதற்கும் அதனோடு தொடர்புற்ற கைத்தொழில்களின் நிலைபேறுடைய தன்மையைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்களின் முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுவது அத்தியாவசிய மானதாகும். இதற்கமைவாக ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் வரும் சனிக்கிழமையை சருவதேச கரையோர துப்பரவாக்கல் தினத்துக்கு ஒருங்கிணைவாக செப்ரெம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் வரும் சனிக்கிழமையிலிருந்து நான்காம் வாரத்தில் வரும் சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியை "தேசிய கடல்வளங்களை பாதுகாத்தல் வாரமாக" பிரகடனப்படுத்துவதற்கும் இதற்கமைவாக 2016 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து 23 ஆம் திகதிவரை கரையோர துப்பரவாக்கல் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், அரசாங்க மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் தேசிய விழாவை 2016 செப்ரெம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு, மட்டக்குளிய கரையோரத்தில் நடாத்துவதற்குமாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.