• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலித்தீன் மூலம் உருவாகியுள்ள சுற்றாடல் பிரச்சினைகளை குறைக்கும் பொருட்டு பொலித்தீன் பாவனையை உரிய வகையில் முகாமித்தல்
- பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சார்ந்த உற்பத்திகளின் பாவனையை தற்போதைய சமூகத்தில் பரவலாக காணக்கிடைக்கின்றதோடு, இந்த உற்பத்திகளை முறைக்கேடாக பாவித்தல், அப்புறப்படுத்தல் மற்றும் எரித்தல் காரணமாக சமூக, சுற்றாடல், சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பல எழுந்துள்ளன. இலங்கையில் தனியொருவரின் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை நாளொன்றுக்கு சுமார் 0.5 கிலோ கிராம் ஆகுமென்பதோடு, ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து இலட்சம் தொன்கள் பொலித்தீன் மூலப் பொருட்கள் இலங்கைகுள் இறக்குமதி செய்யப்படுகின்றது. உலகில் பல நாடுகள் பொலித்தீன் பாவனையை முழுமையாக தடைசெய்துள்ளதோடு, சில நாடுகள் தெரிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு இடமளித்துள்ளது. உக்கிப்போவதற்கு நீண்டகாலம் எடுக்கும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் சார்ந்த உற்பத்திகள் சுற்றாடலில் ஒன்று சேர்வதனால் நிகழும் பிரதிகூலமான சுற்றாடல் பாதிப்புகள் கட்டுப்படுத்தும் தேவையும் அதேபோன்று பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தொழிற்சாலைகளைச் சார்ந்த ஊழியர்கள் பெருமளவானோர் சேவையில் இருக்கின்றமை போன்ற காரணங்களையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையினுள் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் உயிர்சீரழிவு பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை சம்பந்தமாக தேசிய கொள்கையொன்றையும் செயற்பாட்டுத் திட்டமொன்றையும் தயாரிப்பதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.