• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-09-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் சுற்றாடல் நட்புறவு சாரா கல்நார் இழையங்களின் இறக்குமதி மற்றும் பாவனையினைக் கட்டுப்படுத்தல்
- கூரைத் தகடுகள், தரைக்குப் பதிக்கும் டைல் வகைகள், சீமெந்து குழாய்கள், வாகனங்களின் பிரேக் குகளுக்குத் தேவையான பாட்கள், கடதாசி, கயிறு போன்ற உற்பத்திகள் பலவற்றுக்கு கல்நார் இழையங்கள் பயன்படுத்தப்படுகின்றன உலக சுகாதார அமைப்பினால் புற்றுநோய் காரணியாக இனங்காணப்பட்டுள்ள நீல கல்நார் இழையங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதை 1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் வௌ்ளை கல்நார் இழையங்கள் அடங்கலாக சகல விதமான கல்நார் இழையங்களும் புற்றுநோய்க்கான காரணியாக உலக சுகாதார அமைப்பினால் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வெள்ளை கல்நார் இழையங்களிலிருந்து சுமார் 80 சதவீதம் கூரைகளுக்கு இடும் பொருட்டிலான உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக கல்நார் இழையங்கள் மூலம் சுகாதாரத்திற்கு நேரிடுகின்ற பிரதிகூலமான பாதிப்பினைக் குறைத்துக் கொண்டு மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்குடன் பிற இலாபகரமான பதிலீடுகளைப் பயன்படுத்தி் கல்நார் இழையங்கள் சார்ந்த உற்பத்திகளின் பாவனை, இறக்குமதி மற்றும் உற்பத்தி போன்றவற்றை 2018‑01‑01 ஆம் திகதியிலிருந்து வரையறுப்பதற்கும் 2024‑01‑01 ஆம் திகதியிலிருந்து நாட்டில் கல்நார் இழையங்கள் சார்ந்த உற்பத்திகளை முழுமையாக தடைசெய்வதற்கு செயற்பாட்டு வேலைத்திட்ட மொன்றை தயாரிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.