• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 - வறுமையொழிப்பு ஆண்டினைப் பிரகடனம் செய்தல்
- 2015 சனாதிபதி தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட தேர்தல் பிரகடனம் மூலம் "சிறந்த நாடொன்றை உருவாக்குவதற்கு" வழங்கிய உறுதிக்கு அமைவாகவும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்திக் குறியிலக்குகளுக்கு அமைவாக பொது மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் வெறுமனே பொருளாதார அபிவிருத்தியை மாத்திரம் குறியிலக்காகக் கொள்ளாது சமூகப் பாதுகாப்பு, வருமானம் பகிர்ந்து செல்வதில் நிலவும் முரண்பாடுகளைக் குறைத்தல், பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட சமூகப் பிரிவுகள், மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் அபிவிருத்தி முரண்பாடுகள் போன்ற துறைகளின்பாலும் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும். ஆதலால் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைக்குள் மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு அதற்குரிய துறைகளின்பால் முன்னுரிமை வழங்குவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, இதன் பொருட்டு முழுமையான நிகழ்ச்சித்திட்டமொன்றின் தேவையை இனங்கண்டு செயலாற்றுவதற்கு முன்னுரிமை வழங்கி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டை "வறுமையொழிப்பு" ஆண்டாக பிரகடனப்படுத்துவதற்கும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினதும் மாண்புமிகு பிரதம அமைச்சரினதும் தலைமைத்துவத்தின் கீழ் இயைபுள்ள அமைச்சர்களையும் ஏனைய தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்றின் மூலம் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்குமாக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.