• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பரிஸ் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கமளித்தல்
- காலநிலை மாற்றம் சம்பந்தமான பரிஸ் உடன்படிக்கையில் இலங்கை உட்பட 178 நாடுகள் 2016 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் கைச்சாத்திட்டன. தொழினுட்பமயமாவதற்கு முன்னர் இருந்த மட்டத்துடன் ஒப்பிடும்போது பொதுவான வெப்பநிலை அதிகரிப்பை 2 பாகை செல்சியசுக்குக் குறைவாகப் பேணுவதற்கும் 1.5 பாகை செல்சியஸ்சை விஞ்சாதிருப்பதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பதன் ஊடாக காலநிலை மாற்றங்களின் தாக்கத்தையும் ஆபத்தினையும் கணிசமானளவு குறைப்பது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. நீண்டகால வரட்சி, திடீர் வௌ்ளப்பெருக்கு, கடல்மட்டம் உயர்வடைதல், மண்சரிவு மற்றும் தாழ்நிலங்கள் அமிழ்தல் போன்ற காலநிலை மாற்றங்களினால் பிரதிகூலமான தாக்கங்களுக்கு உட்படக்கூடிய தீவக நாடொன்றாக இலங்கை இந்த உடன்படிக்கையில் ஒரு தரப்பாவது முக்கியமாவதோடு, இதற்கமைவாக இலங்கையினால் பரிஸ் உடன்படிக்கைக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் அதற்கான தொடர்நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.