• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிஸ் திணைக்களத்தை அழைப்பதற்கென உரிய பெயரொன்றைப் பயன்படுத்துதல்
- இலங்கையில் "பொலிஸ்" என்பது ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டுள்ளது. 1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழும் பொலிஸ் திணைக்கள கட்டளைகளின் கீழும் அது "இலங்கை பொலிஸ் படையணி" எனவும் 1945 ஆம் ஆண்டின் பின்னர் "இலங்கை பொலிஸ் திணைக்களம்" எனவும் அழைக்கப்பட்டதோடு, 1972 ஆம் ஆண்டிலிருந்து "இலங்கை பொலிஸ் சேவை" என அழைக்கப்பட்டு வருகின்றது. இலங்கை பொலிஸ் திணைக்களம் அதன் 150 ஆவது ஆண்டை இந்த ஆண்டில் கொண்டாடுவதோடு, இதற்கமைவாக இந்த திணைக்களத்தை அழைப்பதற்கு உரிய பெயரொன்றை பயன்படுத்தும் தேவையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, “இலங்கை பொலிஸ்" என இதன் பின்னர் பயன்படுத்தும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.