• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக மூன்று (03) நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- உமாஓயா பல்நோக்கு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பிரதான சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெஹெரகலதென்ன, மக்குல் எல்ல மற்றும் குருந்துகொல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக மூன்று (03) நீர்வழங்கல் கருத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைவாக, இந்த கருத்திட்டங்களின் நிருமாணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இயைபுள்ள நீர் மூலவளங்களுக்கு அண்மையில் குடியிருக்கும் குடும்பங்கள் அடங்கலாக பயன் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 1,417 இலிருந்து 2,400 வரை அதிகரிக்குமென தெரியவந்துள்ளது. மேற்போந்த மூன்று நீர்வழங்கல் கருத்திட்டங்களுக்கான செலவை 317.24 மில்லியன் ரூபாவாக மீளமைத்து, குறித்த கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.