• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறைச்சாலைகளில் நிலவும் இடவசதியின்மைக்கு தாக்கத்தைச் செலுத்தும் சட்டம் மற்றும் நீதித் துறை விடயங்களை ஆராய்வதற்கான செயலணி
- சிறைச்சாலைகளில் நிலவும் இடவசதியின்மைக்கு தாக்கத்தைச் செலுத்தும் சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த காரணங்களை இனங்காணும் பொருட்டு நீதி அமைச்சின் செயலாளரினதும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரினதும் இணை தலைமைத்துவத்தின் கீழ் இயைபுள்ள திணைக்களங்கள் அடங்கலாக ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் கொண்ட செயலணியொன்றைத் தாபிப்பதற்கும் அதன் மூலம் சிறைச்சாலைகளில் நிலவும் இடவசதியின்மையை குறைப்பதற்கு தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினாலும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.