• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளை அரசாங்க தனியார் பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல்
- தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான 31 பயிர் மற்றும் விலங்கு பண்ணைகள் நாடு முழுவதும் உள்ளதோடு, இதன் மூலம் சிறிய பண்ணைகள் சொந்தமான விவசாயிகளுக்குத் தேவையான அனுசரணை வழங்குவதும் தேசிய பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி அதேபோன்று முட்டை உற்பத்தி போன்றவற்றுக்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலுள்ள பெரிய அளவிலான 04 பண்ணைகள் பாரியளவு நிதி முதலீடு செய்து அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த போதிலும் இதற்கு சமமான ஏனைய பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நிதி பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. ஆதலால், இந்த பண்ணைகளை தனியார் துறையுடன் சேர்ந்து அபிவிருத்தி செய்வதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரசாங்க கமத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தை திருத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.