• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதிவின்றி பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்தல்
- மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பரவலாகக் காணக்கிடைக்கின்றது, பொது போக்குவரத்து வசதிகள் குறைந்த பிரதேசங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இத்தகைய மோட்டார் சைக்கிள்கள் கிராமிய பிரதேசங்களில் கமத்தொழில் பொருளாதாரத்திற்கு போதுமான அளவு பங்களிப்பினை வழங்குவதோடு, சுயதொழில்களில் ஈடபடுபவர்களினாலும் மோட்டார் சைக்கிள்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. கிராமிய பொருளாதாரத்திற்கு போதுமான பங்களிப்பினை வழங்கினாலும், இத்தகைய சைக்கிள்கள் பதிவு செய்யாததன் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய அளவிலான வருமானம் வருடாந்தம் இல்லாமற் போவதோடு, நாட்டில் மோசடி, ஊழல் மற்றும் களவு போன்றவற்றை தடுத்து சட்டத்தை நிலைநாட்டுவதற்கு மிகைக் கட்டணமொன்றை விதிப்பதன் மூலம் இந்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சட்டபூர்வமான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பரிசீலனை செய்ததன் பின்னர் சலுகையொன்றாக பதிவு செய்வதற்கும் இந்த சலுகையை வழங்கும் போது சட்டபூர்வமாக மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளருக்கு பாதிப்பு ஏற்பாடாதவாறும் மோட்டார் வாகன சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவான மோட்டார் சைக்கிள்கள் சார்பில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த சலுகை காலத்தை நான்கு மாத காலத்திற்கு மாத்திரம் வழங்குவதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.