• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-30 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச நிலைபேறுடைய சுற்றுலாத்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைப்பில் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளல்
- சுற்றுலாத்துறை மேம்பாட்டின் மூலம் பொருளாதார அபிவிருத்திசார் அறிவினை முகாமிப்பதற்கும் கருத்திட்டங்களின் அபிவிருத்திக்கும் வசதிகளை ஏற்பாடு செய்தல், வறுமையை ஒழிப்பதன் மூலம் நிலையான சுற்றுலாத்துறை அபிவிருத்தியை அடைதல் என்பன சார்பில் ஆராய்ச்சிகளையும் கருத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல், அரசாங்க - தனியார் கூட்டுத் தொழில்முயற்சியின் மூலம் கலாசாரத்தையும் இயற்கையையும் பாதுகாப்பதற்கு பங்களிப்பு நல்குதல் போன்ற பிரதான நோக்கங்களைக் கொண்டு ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் அனுசரணையின் கீழ் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நிலைபேறுடைய சுற்றுலாத்துறை மற்றும் வறுமை ஒழிப்பு அமைப்பில் இலங்கையும் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.