• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட அதிரடிப் படைப்பிரிவின் கலுபளுவாவ முகாமில் திருமணமான உத்தியோகத்தர்கள் சார்பில் வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- கொழும்பு நகரம் உட்பட அதற்கண்மித்த பிரதேசங்களில் ஒழுங்கு மற்றும் சட்டத்தை பேணுதல், பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் கலகங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் அனர்த்த நிலைமைகளின் போது துரிதமாக தேவையான நிவாரணங்களை வழங்குதல் போன்ற பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள திருமணமான உத்தியோகத்தர்களுக்கு வீடு வசதிகளை ஏற்பாடு செய்வது அவசரத் தேவையாக நிலவுவதோடு, இந்த உத்தியோகத்தர்களுக்கு வீட்டு வசதிகள் வழங்கப்படுவதற்காக விசேட அதிரடிப்படையின் களபளுவாக முகாமில் நிலவும் இடவசதிகளை பயன்படுத்தி 388 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.