• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹாலி-எல பிரதேச செயலகத்துக்குப் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- பதுளை மாவட்டத்திலுள்ள ஹாலி-எல பிரதேச செயலகப் பிரிவானது 57 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்டுள்ளதோடு, அங்கு வசிக்கும் மக்கள் தொகை 90,000 க்கு அதிகமாகும். ஹாலி-எல பிரதேச செயலகம் தற்போது மிக பழைய மற்றும் குறைந்த இடவசதிகளுடனான கட்டடமொன்றில் நடாத்தப்பட்டு வருகின்றதோடு, இதன்காரணமாக அதன் சேவையை பெற்றுக் கொள்ள வரும் மக்களுக்கு பல்வேறுபட்ட இன்னல்களுக்கு ஆளாகவேண்டியுள்ளது. ஆதலால் ஹாலி-எல பிரதேச மக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் பயனுள்ளதுமான சேவையொன்றை வழங்குவதற்கும் அதேபோன்று அலுவலகத்தில் சேவைபுரியம் உத்தியோகத்தர்களுக்கும் சேவைசெய்ய ஏற்ற சூழலை உருவாக்குவதற்குமாக 176 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டு செலவில் ஹாலி-எல பிரதேச செயலகத்துக்குப் புதிய மூன்று மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.