• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரத்தினபுரி அதிவேக பாதை கருத்திட்டம் - சிவில் வேலை ஒப்பந்த கொள்வனவுகளுக்காக பிரேரிப்புகளைப் பெற்றுக் கொள்ளல்
- தெற்கு அதிவேகப் பாதையின் கஹதுடுவ இடமாற்று பிரதேசத்திலிருந்து பல்மடுல்ல வரை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள 73.9 கிலோ மீற்றர் நீளமான உத்தேச இரத்தினபுரி அதிவேகப் பாதையை நிருமாணிப்பதற்கான சாத்தியத் தகவாய்வுப் பணிகள், ஆரம்ப திட்டமிடல் மற்றும் சுற்றாடல் பாதிப்பு தொடர்பிலான மதிப்பீடு போன்ற பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த அதிவேகப் பாதையின் சிவில் வேலைகளுக்கான நிருமாணிப்புக்கு நிதி வழங்குவதற்கு சீன ஏற்றுமதி - இறக்குமதி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் இந்த பாதை நான்கு பகுதிகளாக நிருமாணிக்கப்படவுள்ளதோடு, அதற்காக சீன அரசாங்கத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள கம்பனிகளிடமிருந்து வீதிப் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தொழினுட்ப மற்றும் நிதி பிரேரிப்புகளை கோரும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.