• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டம் - பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான (32.5 கி.மீ.) பிரிவு 3 இனை நிருமாணித்தல் - கேள்வி மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்தல்
- யப்பான் சர்வதேச ஒத்துழைப்புக்கான முகவராண்மையின் நிதி உதவியின் கீழ் நிருமாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேகப் பாதைக் கருத்திட்டத்தின் பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையிலான 32.5 கிலோ மீற்றர் நீளமான 3 ஆம் கட்டத்தின் நிருமாணிப்பு வேலைகளுக்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர் ஒருவரையும் மதியுரைஞர் ஒருவரையும் தெரிவு செய்யும் பொருட்டு பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கேள்வி மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.