• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சருவதேச சமய மாநாடு - 2016 நவம்பர் மாதம் கொழும்பில் நடாத்துதல்
- மதங்களுக்கிடையிலான உறவு மற்றும் புரிந்துணர்வின் மூலம் சமாதான சகவாழ்வு, மதம்சார் நெகிழ்ச்சித்தன்மை, பல்கலாசாரம் அதேபோன்று இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உருவாக்கும் காலத்தின் தேவையைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு சர்வதேச சமய மாநாடுகள் இரண்டினை இலங்கையில் நடாத்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, சுமார் 16 நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் உட்பட உயர்மட்ட உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் "தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் பல்வகைமை மற்றும் சனநாயக சமூகத்திற்கான மதத்தின் வகிபாகம் - இஸ்லாமின் கோணத்தில்" என்னும் தொனிப்பொருளின் கீழ் 2016 நவம்பர் மாதத்தில் கொழும்பில் நடாத்தப்படவுள்ள சர்வதேச சமய மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகளுக்குத் தேவையான நிதியங்களை ஏற்பாடு செய்து கொள்ளும் பொருட்டு அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் கொள்கையளவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.