• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச வவுனியா விசேட பொருளாதார நிலையத்தை இரண்டு இடங்களில் நிருமாணித்தலும் மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்தலும்
- 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிபொன்றுக்கு அமைவாக தாபிக்கப்படவுள்ள வவுனியா விசேட பொருளாதார நிலையத்தை நிருமாணிப்பதற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சரவையினால் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு கையளிக்கப்பட்டதோடு, இது சம்பந்தமாக பல்வேறுபட்ட தரப்புகளினால் செய்யப்பட்ட பிரதிநிதித்துவங்களையும் உரிய வரவுசெலவுத்திட்ட நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி நடப்பாண்டினுள் உரிய நிருமாணிப்பு வேலைகளை பூர்த்தி செய்யும் தேவையையும் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம் விசேட பொருளாதார நிலையமொன்றுக்குப் பதிலாக இரண்டு விசேட பொருளாதார நிலையங்களை முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்திலும் வவுனியா மாவட்டத்தின் மதகுவைத்தகுளம் பிரதேசத்திலும் நிருமாணிக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.