• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ/ சேவை கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான உடன்படிக்கை
- இலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் இராஜதந்திர / உத்தியோகபூர்வ விஜயங்களின் போதான வசதிகளை விருத்தி செய்வதற்கும் இருநாடுகளுக்கிடையில் நிலவும் உறவினை மேலும் விருத்தி செய்வதற்குமான நோக்கில் இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக உடன்படிக்கையை செய்துகொள்ளும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.