• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தார் வியாபாரத்தை தாராளமயப்படுத்துதல்
- நெடுஞ்சாலைகள் உட்பட பிற நிருமாணிப்பு பணிகளுக்கான மூலப் பொருள் ஒன்றாக பயன்படுத்தப்படும் தார் சார்பில் எந்நேரமும் அதிகரித்துச் செல்லும் சந்தை நிலைமையுள்ளது. புதிய நெடுஞ்சாலைகளை நிருமாணிப்பதற்காகவும் அதேபோன்று இலங்கையின் நெடுஞ்சாலை வலையமைப்பின் கிரமமான பராமரிப்பு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றமையினால், தார் சார்பில் நிலையான சந்தை நிலைமை உருவாகியுள்ளது. அதேபோன்று வலயத்திலும் அபிவிருத்தி அடைந்துவரும் பிறநாடுகளிலும் தார் சார்பில் அதிகரித்து வரும் சந்தை நிலைமை காணப்படுகின்றது. ஆதலால், தார் சந்தையை தாராளமயப்படுத்துவதன் மூலம் வலயத்தினுள் வழங்குநர் ஒருவராக மாறும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைக்கும். இதற்கமைவாக, இலங்கையில் தார் வர்த்தகத்தை தாராளமயப்படுத்துவதற்கும் போட்டிகரமான சந்தையொன்றை உருவாக்கும் நோக்கிலும் முன்வைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனத்திலுள்ள பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:

(i) தார் வர்த்தகத்தை தாராளமயப்படுத்துவதற்காக கட்டளைகள் மற்றும் கொள்கைகளை வகுத்தமைத்தல்;

(ii) ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பொருள் ஒன்றாக “தார்” பட்டியலிடப்படுவதன் மூலம் இறக்குமதி உரிமப்பத்திரம் வழகுதல்;

(iii) சருவதேச தரங்களுக்கு அமைவான விதத்தில் தேசிய தரங்களை அறிமுகப்படுத்துமாறு இலங்கை கட்டளைகள் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்குதல்;

(iv) தார் சம்பந்தமாக தர சான்றிதழை வழங்குவதற்காக ஆய்வுகூட வசதிகளை விருத்தி செய்யும் பொருட்டும் ஒப்புதல் செய்யுமாறும் கைத்தொழில் தொழினுட்ப நிறுவனத்திற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் ஆலோசனை வழங்குதல் ; அத்துடன்

(v) உரிமப்பத்திரதாரர்களிடமிருந்து தார் வர்த்தகத்தின் மீது வருடாந்தம் 2 மில்லியன் ரூாபாவைக் கொண்ட நிலையான பதிவுக் கட்டணமொன்றை அறவிடுதல்.