• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய ஆயர்கள் கூட்டமைப்பின் சம்மேளனம்
- ஹொங்கொங் நகரத்தில் பிரதான அலுவலகம் அமைந்துள்ள ஆசிய ஆயர் கூட்டமைப்பானது ஆசிய நாடுகளின் கத்தோலிக்கர்களின் உரிய செயற்பாடுகளின் போது கத்தோலிக்க சமூகத்தினரிடையே சிறந்த ஒருங்கிணைப்பு உள்ளதென்பதை உறுதிப்படுத்துவற்கு செயலாற்றுகின்றது. இந்த கூட்டமைப்பின் குழுக்கூட்டம் நான்கு வருடங்களுக்கு ஒருதடவை நடாத்தப்படுவதோடு, இம்முறை இந்தக் கூட்டமானது 2016 நவெம்பர் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து திசெம்பர் மாதம் 04 ஆம் திகதிவரை நீர்கொழும்பில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆசியாவிலுள்ள சகல நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 08 கார்தினல்மார்களும் 150 இற்கு மேற்பட்ட ஆயர்களும் கலந்து கொள்ள வுள்ளார்கள். இதற்கமைவாக, இந்த கூட்டம் இலங்கையில் நடாத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பினை வழங்கும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.