• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சூரிய சக்தி சங்கிராமய' என்ற பெயரில் ஒரு சன சமூக மைய மின் உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- தற்போது இலங்கையில் மின்சார உற்பத்தியில் சுமார் 50 சதவீதம் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றதோடு, இந்த அளவினை 2020 ஆம் ஆண்டளவில் 60 சதவீதம் வரையும் 2030 ஆம் ஆண்டளவில் 70 சதம் வீதம் வரையும் அதிகரிப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைவாக எதிர்வரும் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் 600 மெகாவோட் காற்று மின் நிலையங்களையும் சுமார் 3,000 மெகாவோட் சூரிய மின் உற்பத்தி நிலையங்களையும் நிருமாணிப்பதற்கும் தேவையாயுள்ளது. இங்கு மின்சார பாவனையாளர்கள் மின்சார உற்பத்தியாளர்களாக மின் உற்பத்தி செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டு முக்கியமாக தங்களுடைய வீடுகளின் கூரைகளின் மீது நிருமாணிக்கப்படும் சிறியரக சூரிய மின் கலங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்று 'சூரிய சக்திசங்கிராமய' என்னும் பேரில் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் மின்சார பாவனையாளர்களில் 20 சதவீதமானோரையாவது மின்சார உற்பத்தியாளர்களாக மாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்துக்கு கொடுப்பனவுகளும் செய்யப்படவுள்ளது. இதற்கமைவாக இந்தக் கருத்திட்டத்தை எதிர்வரும் 10 ஆண்டு காலப்பகுதிக்குள் தேசிய நிகழ்ச்சித்திட்ட மொன்றாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.