• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தினை மேம்படுத்தி தரமுயர்த்துவதற்கான பிரேரிப்புகளை கோருதல்
- கட்டுநாயக்க பொறியியல் தொழினுட்பவியல் நிறுவகத்தை மேம்படுத்தும் கருத்திட்டத்திற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதோடு, இதற்கமைவாக கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியளிக்கும் ஒஸ்ரிய அரசாங்கத்தினால் பொருத்தமான வழங்குநரென சிபாரிசு செய்யப்பட்டுள்ள நிறுவனத்திடமிருந்து அபிவிருத்தி பிரேரிப்புகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்த அபிவிருத்தி பிரேரிப்புகளை மதிப்பிடும் பொருட்டு தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்படும் கொள்வனவுக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் இத்தக் கருத்திட்டத்தை உச்சமாக 9.5 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்குள் நடைமுறைப்படுத்துவதற்குமாக திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.