• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விசேட அதிரடிப் படையின் கட்டுக்குருந்த பயிற்சி கல்லூரியில் 54 ஆம் இலக்க கட்டடத்தை இரண்டு (02) மாடிக் கட்டடமாக நிருமாணித்தல்
- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் கீழுள்ள விசேட அதிரடிப் படையின் பிரதான பயிற்சிக் கல்லூரியாக கட்டுக்குருந்த பயிற்சிக் கல்லூரி செயலாற்றுகின்றது. இந்தப் பயிற்சி பாடசாலையில் பிரமுகர் பாதுகாப்பு பயிற்சி, கலகம் தடுப்பு பயிற்சி, திடீர்சோதனை மற்றும் குண்டுகள் செயலிழக்கும் பயிற்சி போன்ற பயிற்சிகள் பல மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் உள்நாட்டு மற்றும் வெ ளிநாட்டு குழுக்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சிப் பாடசாலையில் பயிற்சிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் தற்போதுள்ள கட்டடமானது மிகப் பழைமை வாய்ந்த கட்டடமாவதோடு, இதன் மூலம் தங்குமிட வசதிகள் வழங்கமுடியுமாவது சுமார் 100 உத்தியோகத்தர்களுக்கு மாத்திரமாகும். இதற்கமைவாக பயிற்சிபெறும் 200 உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவையில் விடுதி வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் 101.49 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட செலவில் விசேட அதிரடிப்படையின் கட்டுக்குருந்த பயிற்சி பாடசாலைக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய இரண்டு மாடி கட்டடமொன்றை நிருமாணிக்கும் பொருட்டு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.