• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரான்ஸ் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசார துறைசார் ஒத்துழைப்பு உடன்படிக்கை
- இலங்கை மற்றும் பிரான்ஸ் கட்டடக்கலை மரபுரிமைகள், தொல்பொருளியல் இடங்களின் பாதுகாப்பு மற்றும் அரும்பொருள் துறை என்பன தொடர்பில் அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்கும் தொல்பொருளியல் மற்றும் அரும்பொருட் துறைகள் போன்றவற்றில் காணக்கிடைக்கும் குறைபாடுகளை தவிர்த்து பிரான்ஸின் புதிய தொழினுட்பம் மற்றும் நிபுணர்களின் ஒத்தாசையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பு கிடைக்கக் கூடிய விதத்தில் பிரான்ஸ் குடியரசின் கலாசார, தொலைத்தொடர்பாடல் அமைச்சுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் கலாசார துறைசார் ஒத்துழைப்பு உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினாலும் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.