• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"Helanco Hotels & SPA (Pvt) Ltd கம்பனி - ஒதுக்கிய மூலதனத்தைக் குறைத்தல்"
- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாபநிதியம் மற்றும் லிற்றோ கேஸ் லங்கா கம்பனி போன்ற நிறுவனங்களினால் Sinolanka Hotels & Spas (Pvt) Ltd., கம்பனி ஊடாக அதன் தாய் கம்பனியான Canwill Holdings (Pvt) Ltd., கம்பனியில் 18.5 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை முதலீடு செய்து "Grand Hyatt Colombo“ ஹோட்டலை நிருமாணிக்கும் பணிகள் 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் நிருமாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இந்த கம்பனியின் துணை நிறுவனமொன்றானHelanco Hotels & SPA (Pvt) Ltd கம்பனியின் கீழ் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் "Hyatt Regency” என்னும் பெயரில் மேலுமொரு ஹோட்டல் ஒன்றை நிருமாணிக்கும் பொருட்டு 4 பில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியினை முதலீடு செய்வதற்குத் தீர்மானித்து சுமார் 315 மில்லியன் ரூபா அதற்காக செலவு செய்யப்பட்டிருந்த போதிலும் குறித்த ஹோட்டல் நிருமாணிப்பு பணிகள் செய்யப்படவில்லை. இதற்கமைவாக குறித்த "Hyatt Regency” ஹோட்டலை நிருமாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை “Grand Hyatt Colombo“ ஹோட்டலின் மீதி நிருமாணிப்பு பணிகளுக்காக முதலீடு செய்யும் பொருட்டு அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று அரசாங்க நிறுவனங்களின் நிதிகளை அவற்றின் அடிப்படை நோக்கங்களுக்குப் புறம்பாக வர்த்தக தொழில் முயற்சிகளில் இடப்பட்டது சம்பந்தமாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் கூடத் தீர்மானிக்கப்பட்டது.