• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிலாபம் மீன்பிடி துறைமுகத்தை மீள அபிவிருத்தி செய்தல்
- தெதுருஓயா முகத்துவாரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சிலாபம் கடற்றொழில் துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதேச கடற்றொழிலாளர்களினால் நீண்டகாலமாக செய்யப்பட்டு வரும் கோரிக்கையொன்றாகுமென்பதோடு, இதற்கமைவாக, அதன் நவீனமயப்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 1,110 வெளியே எஞ்சின்களுடனான மீன்பிடி படகுகளும் 35 பலநாள் படகுகளும் சிலாபம் கடற்றொழில் துறைமுகம் சார்ந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, இந்த படகுகள் களப்பு பிரதேசத்தை நங்கூரமிடும் பிரதேசமாகவும் உபயோகப்படுத்துகின்றன. இதன் போது உருவாகும் பிரதான பிரச்சினையாக காணப்படுவது நுழைவு வழியாக தெதுருஓயா முகத்துவாரம் ஊடாக கடற்றொழில் படகுகள் செல்லும் போது அவை பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஆளாகின்றமையாகும். முக்கியமாக கடல் கொந்தளிப்பு அடையும் காலப்பகுதியில் இந்த முகத்துவாரத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் படகுகள் விபத்துக்கு ஆளாகின்றமையினால் உயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்படுகின்றன. ஆதலால், கடல் கொந்தளிப்பற்ற காலப்பகுதியில் மாத்திரம் பிரதேசவாழ் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வொன்றாக உரிய சாத்தியத் தகவாய்வின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு நீர்வழி உடைப்பினை நிருமாணிப்பதற்கும் நுழைவு வழியிலும் களப்பு முகத்துவாரத்திலும் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்துவதற்காகவும் அதற்குத் தேவையான 550 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.