• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆனமடுவ நகர பஸ்தரிப்பு நிலைய இரண்டாவது கட்டத்தின் அபிவிருத்திக் கருத்திட்டம்
- ஆனமடுவ நகரம் புத்தளம் மாவட்டத்தில் கமத்தொழிலை அடிப்படையாகக் கொண்டுள்ள கிராமிய பிரதேசங்கள் பலவற்றுக்கு சேவை வழங்கும் மத்திய நிலையமொன்றாகும். முக்கியமாக அதன் சுற்றுப்புற பிரதேசங்களில் உற்பத்தி செய்யப்படும் கமத்தொழில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிலையமொன்றாகவும் பாரிய நீரேந்துப் பிரதேசமொன்றுக்கு மூலப்பொருள் வழங்கும் சேவை நிலையமொன்றாகவும் வழங்கும் சேவைகள் முக்கியமானதாகும். ஆனமடுவ பஸ்தரிப்பு நிலையம் இந்த நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளதோடு சுமார் 15,000 பிரயாணிகளுக்கு நாளாந்தம் போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றது. ஆனமடுவ பஸ்தரிப்பு நிலைய அபிவிருத்திக் கருத்திட்டம், ஆனமடுவ அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னுரிமை கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டுள்ளதோடு, 2012ஆம் ஆண்டில் மாகாண சபை நிதியத்தின் கீழ் அதன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நிருமாணிப்பு வேலைகளின் ஒருபகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்திட்டம் பிரதேச மக்களின் நலனின் பொருட்டு நகர் சார்ந்த வசதிகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு முக்கியமாக நடைமுறைப்படுத்தப்படு கின்றமையினால், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் மீதி வேலைகளை பூர்த்தி செய்வதற்கும் அதற்குத் தேவையான 25 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினை குறித்தொதுக்குவதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.