• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு நிலையான தீர்வு தொடர்புற்ற தேசிய கொள்கை
- மோதல் நிலைமை காரணமாக இடம்பெயர்ந்தோருக்கு நிலையான தீர்வு வழங்குவது தொடர்பிலான தேசிய கொள்கையொன்று இருப்பது அத்தியாவசிய விடயமொன்றாகும். இதற்கமைவாக, இயைபுள்ள அமைச்சுக்கள், தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களைச் சேர்ந்த தரப்பினர்கள், ஐக்கிய நாடுகளின் முகவராண்மைகள், சிவில் சமூக அமைப்புகள் உட்பட இடம்பெயர்ந்த மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக மோதல் நிலைமை காரணமாக நிகழ்ந்த இடம்பெயர்தல் சார்பில் நிலையான தீர்வு தொடர்பிலான தேசிய கொள்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது. உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையொன்றைப் பயன்படுத்தி மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பொருட்டு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இந்த கொள்கையின் ஊடாக தெளிவாகின்றது. நிலையான தீர்வொன்றை உறுதிப்படுத்துதல் அவர்களை மீளக் குடியமர்த்துதலுக்கு அப்பாலான விடயமொன்றென்பதுவும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பினை ஏற்படுத்துதல், வீடு, நீர், துப்பரவேற்பாடு, சுகாதாரம் போன்றவற்றை ஏற்பாடு செய்தல், ஆரம்ப கல்வியை உறுதி செய்தல், சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதாரத்துக்கான அணுகலை ஏற்பாடு செய்து கொடுத்தல் போன்றன உள்ளடங்க வேண்டுமென்பதுவும் இதன் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. அதேபோன்று இந்தக் குடும்பங்களை சமூகமயப்படுத்தும் போது பால் வேறுபாடு, இனம், வயது, மொழி, அரசியல் கருத்துகள், மதம், சாதி, வாழ்ந்த இடங்கள் போன்றவற்றை கருத்திற் கொள்ளாது ஏனைய பிரசைகளுக்கு சமமான உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவாறு நிலையான தீர்வுகள் வழங்கப்படுதல் வேண்டும். இதற்கமைவாக, மேற்போந்த கொள்கையை அங்கீகரிக்கும் பொருட்டு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.