• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயல்முறையொன்றை தயாரித்தல்
- பல்வேறுபட்ட அமைச்சுக்களினால் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் கருத்திட்டங்களை செயற்படுத்தும் போது உருவாகக்கூடிய ஒருங்கிணைப்புக் குறைபாடுகள், கருத்திட்டமொன்றுக்குரிய நோக்கங்கள் மற்றுமொரு கருத்திட்டத்தின் விடயநோக்கெல்லைக்குள் உள்வாங்கப்படுதல் போன்ற குறைபாடுகளைத் தவிர்த்து ஒன்றிணைந்த கிராமிய அபிவிருத்தி செயல்முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு, நிதி அமைச்சு , உள்நாட்டலுவல்கள் அமைச்சு , கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்கள் அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் உள்ளடங்கிய வழிப்படுத்தல் குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.