• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கு முப்படைகளையும் சேர்ந்த இளைப்பாறிய தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
- தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் நாட்டின் சகல மாவட்டங்களையும் தழுவி நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி தொடர்பிலான பிரதான நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த கருத்திட்டங்களுக்கு மேலதிகமாக ஏனைய பல்வேறுபட்ட அமைச்சுக்களினால் பிற நடைமுறைப் படுத்தப்படும் கருத்திட்டங்களும் மாவட்ட செயலகங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையிலுள்ள இந்தக் கருத்திட்டங்களின் மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் மேற்பார்வை சார்பில் 700 தொழினுட்ப உத்தியோகத்தர்களின் சேவை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் தேவைப்பட்டாலும் சுமார் 300 தொழினுட்ப உத்தியோகத்தர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, இது இந்த கருத்திட்டங்களை உரிய காலப் பகுதிக்குள் முடிவுறுத்துவதற்கு தடையாகவுள்ளது. இதற்கமைவாக நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை உரிய காலப்பகுதியில் முடிக்கும் நோக்கில் முப்படைகளிலும் சேவையாற்றி ஓய்வுபெற்ற தொழினுட்ப உத்தியோகத் தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.