• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஓசோன் படலத்திற்கு சேதத்தை உண்டுபண்ணும் இராசாயன பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்துவதன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல்
- ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான வியன்னா சமவாயத்திலும் மொன்றியல் சமவாயத்திலுமுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக ஓசோன் படலத்திற்குத் தாக்கத்தை விளைவிக்கும் பொருட்களை படிப்படியாக பாவனையிலிருந்து நீக்குவதற்கும் ஓசோன் நட்புறவுமிக்க மாற்றுப் பொருட்களையும் தொழினுட்ப வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உலக வெப்பமாதலின்பால் நேரடியான தாக்கத்தைச் செலுத்தும் ஹைட்ரோ குளோரோபுளோரோ காபனின் இறக்குமதியை மட்டுப்படுத்தும் வழிமுறைகளும் இறக்குமதி பங்குமுறையொன்றும் 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த இரசாயனப் பொருளானது சந்தையில் பெற்றுக் கொள்வது வரையறுக்கப்பட்டுள்ளதோடு, இந்தப் பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் சேவைகள் மற்றும் பராமரிப்பு பணிகளின்பால் விசேடமாக குளிரூட்டல் மற்றும் குளிரூட்டித் துறையின்பால் இது கடும்தாக்கத்தை செலுத்தலாம். இதற்கமைவாக, இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு குறுகியகால மற்றும் நீண்டகாலத் தீர்வுகளாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரிப்புகளை மீளாய்வு செய்து அமைச்சரவைக்குச் சிபாரிசுகளைச் சமர்ப்பிப்பதற்கு உரிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.