• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண் அரிப்புக்கு உட்பட்டுள்ள கமத்தொழில் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான கருத்திட்டம்
- மண் கழுவுண்டு செல்லல் அடங்கலாக பல்வேறுபட்ட காரணங்களின் மீது நிலம்சார்ந்து ஏற்படும் சேதங்கள் அல்லது "மண்ணரிப்பு" இலங்கையில் காணப்படும் கடுமையான சுற்றாடல் பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளது. மத்திய மலைநாட்டின் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கமத்தொழில் பிரதேசங்கள் மண்ணரிப்புக்கு ஆட்பட்டுள்ளதோடு, அதில் அதிகூடிய பாதிப்பு கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் பரவலாக காணக்கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக இந்த பிரதேசங்களில் சுற்றாடல் முறைமைக்கும் முக்கியமாக கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் முகம்கொடுக்க நேரிடுகின்ற பிரச்சினைகளையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நிலைபேறுடைய காணி முகாமைத்துவம் ஒன்றின் மூலம் இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் 9,740,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியையும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் அமைப்பினால் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் 1,344,657 ஐக்கிய அமெரிக்க டொலர்களையும் பயன்படுத்தி 2016 - 2020 காலப்பகுதிக்குள் கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் கமத்தொழில் காணிகளின் மண்ணரிப்பினைத் தடுக்கும் பொருட்டு கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.