• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிவரவு, குடியகல்வு சட்டங்களை அமுல்படுத்தும் நிலையத்தை நிருமாணித்தல்
- விசா காலம் முடிவுற்றதன் பின்னர் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக புலம் பெயர்வதற்காக தங்கல் நிலையமொன்றாக இலங்கையை பயன்படுத்த முயற்சிக்கும் வெளிநாட்டவர்களையும் கைது செய்து நாட்டிலிருந்து வெளியேற்றும் வரை தற்காலிகமாக தடுத்து வைப்பதற்கான தடுப்பு நிலையமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சருவதேச விமானநிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரதேசமொன்றில் வசதிகளைச் செய்வதற்கு பொருத்தமானதென அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக உத்தேச குடிவரவு, குடியகல்வு சட்டங்களை அமுல்படுத்தும் நிலையத்தை கட்டடங்கள் திணைக்களத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளதற் கமைவாக 327 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் கம்பஹா மாவட்டத்தின் கட்டான பிரதேச செயலகப் பிரிவில் களுதியவள வத்தை என்னும் காணியில் நிருமாணிக்கும் பொருட்டு உள்ளக அலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.