• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய இயந்திரசாதனங்கள் நிறுவனத்தைப் பலப்படுத்துதல்
- அரசாங்க நிறுவனங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக பிரதேச மட்டத்தில் மண் வெட்டும் இயந்திரங்களையும் ஏனைய அத்தியாவசிய நிருமாணிப்பு உபகரணங்களையும் வழங்கும் பொருட்டு தேசிய இயந்திரசாதனங்கள் நிறுவனமானது 1992 ஆம் ஆணடிலே தாபிக்கப்பட்டதோடு, அது அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றாக தற்போது இயங்கி வருகின்றது. அமைச்சரவையினால் 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம் மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் நிருமாணிப்புக் கருத்திட்டங்களுக்குத் தேவையான இயந்திர சாதனங்களையும் உபகரணங்களையும் வாகனங்களையும் வாடகைக்கு எடுப்பதற்கும் தெரிவு செய்யப்பட்ட வேலைகளுக்குரிய ஒப்பந்தங்களை வழங்குவதற்குமாக தேசிய இயந்திரசாதனங்கள் சேவையை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.