• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யப்பானின் நவீன கமத்தொழில் தொழினுட்பத்தை இலங்கைக்காக பெற்றுக் கொள்ளும் நோக்கில் கமத்தொழில் திணைக்களத்தின் வல்பிட்ட பண்ணையில் அதிதொழினுட்ப கமத்தொழில் பயிற்சி நிலையமொன்றை தாபித்தல்
- கமத்தொழில் துறையின் உற்பத்திகளை பயனுள்ள விதத்தில் அதிகரிக்கும் பொருட்டு நவீனமயப்படுத்தப்பட்ட புதிய தொழினுட்ப அறிவினை பயனுள்ள வகையில் பயன்படுத்தக்கூடியவர்களை பயிற்றுவித்தல் மற்றும் இளைய தொழில் முயற்சியாளர்களை கவர்ந்திழுத்தல் என்பன மிக முக்கியமானதாகும். கம்பனியொன்றாக இலங்கையினுள் பதிவு செய்யப்பட்டுள்ள Japan Lanka Agriculture Industrial Research and Training Center (Pvt) Ltd நிறுவனத்தினால் கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையமொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதோடு, அதற்காக கமத்தொழில் திணைக்களத்துக்குச் சொந்தமான வல்பிட்ட பண்ணையில் தற்போது உபயோகப்படுத்தப்படாத சுமார் 06 ஏக்கர் காணியொன்றை பயன்படுத்துவதற்கு கருதப்படுகின்றது. இதற்கமைவாக இந்த நோக்கத்துக்காக குறித்த கம்பனியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.