• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தம்புள்ளையிலுள்ள காணியொன்றை குளிரூட்டல் நிலையமொன்றை நிருமாணிப்பதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்குதல்
- தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் கீழ் உள்நாட்டு மரக்கறி மற்றும் பழ உற்பத்தியாளர்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் குளிரூட்டல் நிலையமொன்றை தாபிக்கும் பொருட்டு இந்த நோக்கத்திற்கு பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ள தம்புள்ளை நகரத்திலுள்ள சுமார் 188 பேர்ச்சர்ஸ் காணியொன்றை அரசாங்க பிரதான விலைமதிப்பீட்டாளரினால் தீர்மானிக்கப்படும் நடைமுறை சந்தை பெறுமதியின் மீது கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.