• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல்மாகாண மாநகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சிங்கப்பூர் சருவதேச தொழில்முயற்சி சபையின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல்
- நாட்டின் பொருளாதாரத்தின் துரித வளர்ச்சிக்கான முன்னுரிமை திறமுறையொன்றாக மேல்மாகாண மாநகரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன்கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி கருத்திட்டங்கள் பலவாகும். குறித்த கருத்திட்டங்களுக்கிடையில் சில கருத்திட்டங்களின் சிக்கலான மற்றும் நுணுக்கமான தொழினுட்பம் தேவைப்படும் கருத்திட்டங்களாவதோடு, இந்த கருத்திட்டங்களுக்கு விரிவான திட்டங்களைத் தயாரிக்கும் போதும் அதேபோன்று அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும் சருவதேச நிபுணர்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக மேல்மாகாண மாநகர கருத்திட்டத்தில் சில பகுதிகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு வர்த்தக மத்திய நிலையமொன்றாக சிங்கப்பூர் பெற்றுள்ள அனுபவத்தை பரிமாறிக் கொள்ளும் முக்கியத்துவத்தை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, அதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழுள்ள நியதிச்சட்ட நிறுவனமொன்றான சிங்கப்பூர் சருவதேச தொழில்முயற்சி சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.