• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மேல்மாகாண மாநகர செயற்றிட்டத்தின் கீழ் மனங்கவர் நகரங்களை நிருமாணித்தல்
- மேல்மாகாண மாநகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய துறையொன்றாக மனங்கவர் நகரங்களின் (Smart Cities) உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இனங்காணப்பட்டுள்ளது. நகர சேவைகளின் தரம், வினைத்திறன் மற்றும் இடையீட்டு செயற்பாடுகள் போன்றவற்றை விரிவுபடுத்துதல், செலவு மற்றும் வள பாவனையைக் குறைத்தல், மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் பொருட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் மனங்கவர் நகரங்களில் பயன்படுத்தப்படும். இதற்கமைவாக பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேல்மாகாண மாநகரங்களில் மனங்கவர் நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தொழினுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப துறையில் அனுபவம் மிக்க சருவதேச நிறுவனமொன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள SIEMENS LIMITED கம்பனியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.