• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுபோகத்தின் போது நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டம் - 2016
- 2016 சிறுபோகத்திற்கான நெல் அறுவடை அண்மையில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த போகத்தில் 19 மாவட்டங்களை தழுவும் விதத்தில் சுமார் 120,000 மெற்றிக்தொன் நெற்தொகையை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, பதிவுசெய்யப்பட்ட மற்றும் இந்தப் போகத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, அதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு உரிய மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராமிய மட்ட உத்தியோகத்தர்களினால் செய்யப்படும். 2016 சிறுபோகத்தில் கீரிசம்பா நெல் கிலோகிராம் ஒன்று 50/- ரூபா வீதமும் சம்பா வகை நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 41/- ரூபா வீதமும் நாடு வகை நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 38/- ரூபா வீதமும் கொள்வனவு செய்யும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.