• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதிச் சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபித்தல்
- பிணக்குகளுக்கு உட்படும் நிதி நிறுவனங்களுக்கு மீள் நிதியிடுவதற்கு ஒத்தாசை நல்கும் பொருட்டும் அவற்றில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சொத்துக்களைப் பொறுப்பேற்று இந்த நிறுவனங்களை மீளமைக்கும் நோக்கில் நடவடிக்கை எடுப்பதற்காகவும் நிதிச் சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவன மொன்றைத் தாபிப்பதற்கு 2016 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. இதற்கமைவாக, நிதி கம்பனிகளில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள சொத்துக்களை பொறுப்பேற்று தீர்த்து வைக்கும் நோக்கில் நிதிச் சொத்துக்கள் முகாமைத்துவ நிறுவனமொன்றைத் தாபிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக தேவையான சட்ட கட்டமைப்பை தயாரித்தல் அடங்கலாக இந்த நிறுவனத்தை தாபிப்பது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.