• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் டெங்கு ஒழிப்பினையும் மற்றும் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளையும் பலப்படுத்துதல்
- கடந்த பல வருடங்களாக டெங்கு நோய் இலங்கையில் காணக்கிடைக்கும் பிரதான பொது சுகாதார பிரச்சினையொன்றாக மாறியுள்ளதோடு, இந்த நோய் பரவுவதை தடுப்பதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு பல நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆயினும், நுளம்பு பரவும் இடங்கள் வீடுகளுக்கு அருகாமையிலும் நிறுவன மனையிடங்களிலும் பரந்து காணப்படுகின்றமையினால் டெங்கு ஒழிப்பு பணிகள் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதென தெரியவந்துள்ளது. இதற்கமைவாக டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளைப் பலப்படுத்தி டெங்கு ஒழிப்புத் திட்டமொன்றாக செயலாற்றும் பொருட்டு நிரந்தரமானதும் அர்ப்பணிப்பு மிக்கதுமான பதவியணியொன்றை இணைப்பதற்கும் இந்த பணிகளுக்குத் தேவையான பௌதிக வளங்களை வழங்குவதற்கும் இந்த டெங்கு நோய் ஒழிப்புத் திட்டத்தைமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்குமாக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.