• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுவிஸ் சவால் நடவடிக்கைமுறை பற்றிய வழிகாட்டல்
- அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வெளிப்படத் தன்மை வாய்ந்ததும் முதலீடு செய்யப்படுவதுமான தொகைக்கு நிகரான பெறுமதி கிடைக்குமென உறுதி செய்யும் பொருட்டு போட்டி கேள்வி கோரும் வழிமுறையைப் பின்பற்றபட வேண்டுமென்பது அரசாங்கத்தினால் வழியுறுத்தப்பட்டுள்ளதோடு, தன்னார்வ அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அழைப்பு விடுக்கப்படாத பிரேரிப்புகளின் ஆர்வத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும், முதலீட்டாளர்களினால் அழைப்பு விடுக்காமல் சமர்ப்பிக்கப்படும் பிரேரிப்புகளில் உள்ள மரபுரிமை தொழினுட்பத்திற்கு புறம்பானதும் இதுவரை கவனம் செலுத்தப்படாததுமான விடயங்களை இனங்காணுதல் போன்ற சாதனமாக அம்சங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு உலகத்தில் உள்ள பெருமபாலான நாடுகள் அத்தகைய பிரேரிப்புகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சுவிஸ் சவால் வழிமுறையை பின்பற்றுகின்றன. ஆதலால், பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரம், தன்னார்வ அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் அழைப்பு விடுக்கப்படாத பிரேரிப்புகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட சுவிஸ் சவால் நடவடிக்கைமுறை பற்றிய வழிகாட்டலை அரசாங்கத்தின் பெறுகை வழிகாட்டலாக சேர்க்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.