• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் யப்பானிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்
- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு 449 ரூபவாஹினி கல்வி ஆவணப்பட நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கு 52.6 மில்லியன் யப்பான் யென் (அண்ணளவாக 73 மில்லியன் ரூபா) கொடையொன்றை வழங்குவதற்கு யப்பான் அரசாங்கத்தினால் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்த நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கையில் ஒலிபரப்புவதற்குத் தேவையான ஒலிமாற்றுகை, உபதலைப்புகள் இடுதல் மற்றும் தயாரிப்பு போன்றவற்றுக்கான செலவுகளும் யப்பான் நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் தழுவப்படும். இதன் மூலம் உலக அறிவு தொடர்பிலான அறிவை இலங்கை ரசிகர்கள் இடையே கட்டியெழுப்பப்படும். இது தொடர்பில் யப்பான் அரசாங்கத்துடன் பரிமாற்றல் பத்திரங்களை கைச்சாத்திடுவதற்கும் யப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையுடன் பிரதான உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.