• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி நகரக் கருத்திட்டம்
- உத்தேச நிதி நகரத்தின் முக்கிய நோக்கமாவது வலையத்தின் முன்னுரிமை நிதி மையநிலையமொன்றாக மாறுவதோடு, இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வலையங்கள் அதேபோன்று இங்கிலாந்து அடங்கலாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வௌிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுப்பது சம்பந்தமாகவும் கவனம் செலுத்துவதுமாகும். இந்த நிதி நகரத்தை எமது வலையம் சார்பில் போட்டிகரமான நவீன நிதி சேவைகளை வழங்கும் மையநிலையமொன்றாக மாற்றுவதன் மூலம் இலங்கைக்கு வௌிநாட்டு மூலதனம் பெருமளவில் வந்தடையும். அத்துடன் புதிய அறிவுசார்ந்த திறமைகளும் ஆற்றல்களும் உருவாக்கப்பட்டு இலங்கையர்களுக்கு பரந்துபட்ட தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். தேசிய ரீதியாக முக்கிய விசேட கருத்திட்டமொன்றாகக் கருதப்படும் இந்தக் கருத்திட்டத்திற்குத் தேவையான பதவியணி மற்றும் வளங்களைப் பெற்றுக் கொண்டு நிதி நகரத்தின் அடிப்படை செயற்பாடுகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆரம்பிப்பதற்கும் நிதி நகரத்தைத் தாபிப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான சட்டங்களை ஆக்குவதற்கும் அதற்குத் தேவைப்படும் சட்ட சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.