• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசியல் காரணங்களின் மீது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு ஆளான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சலுகையளித்தல்
- அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களுக்கு ஆளான பொலிஸ் உத்தியோ கத்தர்களின் மேன்முறையீடுகளைப் பரிசீலனை செய்யும் பொருட்டு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் குழுவினால் சலுகையளிப்பதற்காக சிபாரிசு செய்யப்பட்டுள்ள 129 பொலிஸ் உத்தியோ கத்தரினுள் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்படாத உத்தியோகத்தர்களுக்கு இயைபுள்ள சலுகைகளை துரிதமாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன்போது பொலிஸ் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் முதுநிலைக்கு பிரதிகூலமான தாக்கங்களை ஏற்படுத்தாத விதத்தில் குறித்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.