• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்திற்காகப் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தம்
- இலங்கை காப்புறுதித் தொழிலின் அபிவிருத்திக்கும் கண்காணிப்பிற்கும் ஒழுங்குறுத்துகைக்கும் வசதிகளைச் செய்யும் பொருட்டு 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதி தொழில் ஒழுங்குறுத்தல் சட்டத்தின் மூலம் இலங்கை காப்புறுதி சபை தாபிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க மற்றும் 2011 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சட்டங்களின் மூலம் குறித்த சட்டமானது திருத்தப்பட்டது. “இலங்கை காப்புறுதி சபை" என்னும் பெயர் "இலங்கை காப்புறுதி ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு" என மாற்றுதல் அடங்கலாக சில திருத்தங்களைச் செய்யும் பொருட்டு 2013 ஆம் ஆண்டில் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, அதற்கமைவாக குறித்த திருத்தங்களைச் செய்வதற்கான திருத்த சட்டமூலம் சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு காப்புறுதி சபைகளுக்கு விசேட சலுகைகளின்றி சமமாக செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் இலங்கை காப்புறுதி சபையினால் செய்யப்பட்டுள்ள மேலதிக திருத்தங்களையும் உள்ளடக்கி மேற்போந்த திருத்த சட்டமூலத்தை வரையும் பணிகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் அவ்வாறு வரையப்படும் சட்டமூலமானது சட்டமா அதிபரின் இசைவாக்கத்தினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.