• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விகாரைகளையும் மத வழிபாட்டுத் தலங்களையும் புனரமைத்தல் / மறுசீரமைத்தல்
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவிய மோதல் நிலைமை காரணமாக வரலாற்று ரீதியிலும் கலாசார ரீதியிலும் முக்கியமான பல விஹாரைகளும் / மதவழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்துள்ளதோடு, அவற்றின் புனரமைப்புப் பணிகளை கேள்வி நடிவடிக்கை முறையைப் பின்பற்றாது நேரடியாக குறித்த மாகாணங்களில் உள்ள விஹாரைகளினதும் / மதவழிபாட்டுத் தலங்களினதும் நம்பிக்கைப் பொறுப்பு சபைகளுக்கு வழங்குமாறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய புனரமைப்புப் பணிகளின் தன்மைகளையும் இவற்றுக்காக உள்நாட்டு / வௌிநாட்டு தோற்றுவாய்களிலிருந்து கிடைக்கும் பொருள் ரீதியானதும் நிதி ரீதியானதும் அதேபோன்று பங்களிப்பு ரீதியானதுமான உதவிகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய மாவட்ட செயலாளர்களினதும் பிரதேச செயலாளர்களினதும் நேரடி மேற்பார்வையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் சேதமடைந்த விஹாரைகளையும் / மதவழிபாட்டுத் தலங்களையும் புனரமைக்கும் / மறுசீரமைக்கும் பணிகளை நேரடியாக உரிய விஹாரைகளினதும் / மதவழிபாட்டுத் தலங்களினதும் நம்பிக்கைப் பொறுப்பு சபைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.