• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மனிதவள சேவைகள் முகவராண்மை ஒன்றைத் தாபித்தல்
- தேசிய கொள்கைகளைத் தயாரிப்பதற்காகவும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காகவும் அரசாங்கத்திற்கு தொழில்சார்பாளர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மனிதவள சேவைகள் முகவராண்மை ஒன்றைத் தாபிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் முன்வைத்த பிரேரிப்புக்கு அமைவாக குறித்த முகவராண்மையை 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தாபிப்பதற்காக அமைச்சரவையினால் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, குறித்த முகவராண்மையின் அடிப்படை மூலதனத் தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு திரட்டிய நிதியத்திலிருந்து 5 மில்லியன் ரூபாவைக் கொண்ட கொடையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்த முகவராண்மையை கூட்டிணைக்கும் பணிகளுக்காக சட்ட சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனத்தின் உதவி பெற்றுக் கொண்டதன் சார்பில் தழுவு அங்கீகாரம் பெற்றுக் கொள்வதற்குமாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.