• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்படைகளினதும் வெடிமருந்து பொருட்களையும் வர்த்தக ரீதியான வெடிமருந்து பொருட்களையும் களஞ்சியப்படுத்துவதற்காக மக்கள் சனத்தொகை குறைந்த பிரதேசத்தில் களஞ்சியசாலைக் கட்டடத் தொகுதியொன்றை நிருமாணித்தல்
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ செயற்பாடுகள் நிலவிய காலப் பகுதியினுள் பயன்படுத்தப்பட்ட ரவைகள் மற்றும் வெடிப்பொருட்கள் பல்வேறுபட்ட இடங்களில் தற்காலிகமாக களஞ்சியப்படுத்தப்பட்டதோடு, அவற்றை உரியவாறு களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக சர்வதேச தரங்களுக்கு அமைவாக களஞ்சியசாலையொன்றை சனத்தொகை குறைந்த பிரதேசமொன்றில் நிருமாணிப்பதற்கு 2011 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகக்குறைந்த மக்கள் உள்ள இடமொன்றில் வெடிப்பொருட்கள் களஞ்சியப்படுத்துவது பொருத்தமாகையினால் தற்போது பல்வேறுபட்ட இடங்களில் களஞ்சியப்படுத்தியுள்ள முப்படைகளுக்குச் சொந்தமான வெடிமருந்து பொருட்களையும் வர்த்தக ரீதியான வெடிமருந்து பொருட்களையும் களஞ்சியப்படுத்துவதற்காக சர்வதேச தரங்களுக்கு அமைவாக முறையான களஞ்சியசாலையொன்றை அநுராதபுரம் மாவட்டத்தின் ஒயாமடுவ பிரதேசத்தில் நிருமாணிக்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.