• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான "வளநிலையம்" ஒன்றை நிருமாணிக்கும் பொருட்டு நீண்டகால குத்தகையின் மீது அரச காணியொன்றை குறித்தொதுக்குதல்
- தேசிய, மாகாண மற்றும் பிரதேச மட்டத்தில் அரசாங்க கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டின் முதன்மையானதும் முக்கியமானதுமான சேவையாக ஏற்றுக் கொள்ளப்படும் இலங்கை நிருவாக சேவையின் உத்தியோகத்தர்கள் சார்பில் வள நிலையமொன்றை நிருமாணிப்பதற்கு பத்தரமுல்ல பிரதேசத்திலுள்ள காணித்துண்டொன்றை இலங்கை நிருவாக சேவை சங்கத்திற்கு வழங்கும் பொருட்டு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.